ஐ.நா.
ஒரு செத்துப்போன உடல் போலத்தான்!
தமிழர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்து கொள்ளும் இலங்கை இராணுவத்தைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் ஐ.நா.வுக்குக் கூட கிடையாதா?
- தேனி சிவ.சிவா, மயிலாடும்பாறை
ஐ.நா என்பது உடல் மாதிரி. எல்லா நாடுகளும் - உயிர்.
உயிர் இயங்காவிட்டால், ஐ.நா. ஒரு செத்துப்போன உடல் போலத்தான்! உலகெங்கும் - வெளிநாட்டு யுத்தங்கள் நிகழ்ந்து, பல லட்சக்கணக்கானவர்கள் இறந்த பிறகு, ஐ.நா. ஓர் அறிக்கை வெளியிட்டால் அதிகம்!
1994-ல் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் இனப்போர் நடந்தது. அதில் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவிகள் பத்து லட்சத்துக்கும் மேல். ஐ.நா. அங்கே 'அமைதியை நிலைநாட்ட' 2,500 பேர் அடங்கிய 'ராணுவம்' ஒன்றை அனுப்பியிருந்தது. அந்தப் போரில் துரதிர்ஷ்டவசமாக 10 ஐ.நா. வீர்ர்கள் கொல்லப்பட்டனர். ஐ.நா. உடனே தன் 'ராணுவத்தை' வாபஸ் வாங்கிக் கொண்டதுதான் நடந்தது. ஐ.நா. என்பது லொடலொடவென்று பேசுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு 'பீலா' கிளப்!
ஹாய் மதன் கேள்வி – பதில், ஆனந்த விகடன், 4.3.09
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக