ஞாயிறு, 29 மார்ச், 2009

ஈழப் பிரச்சினையைப் பேசத் தடையா? தேர்தல் ஆணையம் விளக்கம்

ஈழப் பிரச்சினையைப் பேசத் தடையா?
தேர்தல் ஆணையம் விளக்கம்

ஈழத் தமிழர் பிரச்சினைப் பற்றி தேர்தல் களத்தில் பேசக் கூடாது என்றும், அதுதொடர்பான வெளியீடுகளை அச்சகங்கள் வெளியிடக் கூடாது என்றும் தேர்தல்ஆணையத்தின் விதிமுறைகள் என்ற பெயரில் மாநகர காவல்துறைஅறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் இத்தகைய கட்டுப்பாடுகளைவிதித்திருப்பது உண்மைதானா என்று தமிழக தேர்தல் ஆணையர் நரேந்திரகுப்தாவிடம் வழக்கறிஞர்கள் குழுவாக சென்று நேரில் கேட்டபோது, தேர்தல்ஆணையம் அத்தகைய விதிமுறைகள் எதையும் அறிவிக்கவில்லை என்றுதெளிவுபடுத்தியுள்ளார். அப்படியானால் மறுப்பு அறிக்கை வெளியிடுங்கள் என்று, வழக்கறிஞர்கள் குழு கேட்டபோது நாங்கள் வெளியிடாத அறிக்கைக்கு எப்படிமறுப்பு தெரிவிக்க முடியும் என்று பதிலளித்துள்ளார். ஆனாலும் - தமிழககாவல்துறை தமிழ்நாட்டில் தேர்தல் முடியும் வரை ஈழத் தமிழர்பிரச்சினைகளைப் பேச விடாமல் தடுக்கும் முயற்சிகளை திட்டமிட்டுமேற்கொண்டு வருகின்றன. மயிலாடுதுறையில் கழக சார்பில் நிறுவப்பட்ட ஈழத்தமிழர் படுகொலைகளை சித்தரிக்கும் கண்டனப் பதாகைகளை அகற்றியுள்ளனர். தனியார் நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ள இத்தகைய பதாகைகளும்நீக்கப்படுகின்றன.

நன்றி: புரட்சிப் பெரியார் முழக்கம் மார்ச் 26 2009


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

case poodalamee!!! police meethu