வியாழன், 9 ஏப்ரல், 2009

விடுதலைப் புலிகள் கொடியில் 33 “புல்லட்டுகள்“ ரகசியம்?

மதுரை ஓவியர் வரைந்த

விடுதலைப் புலிகள் கொடியில் 33 “புல்லட்டுகள்“ ரகசியம்?


விடுதலைப் புலிகளின் கொடியில் உள்ள 33 புல்லட்டுகளின் புதிய ரகசியம் கசிந்த்தால் இலங்கை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


விடுதலைப் புலிகள்


உலகின் மிகப் பெரிய போர்ப்படை இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பாகும். மிகவும் கட்டுப்பாடுகள் நிறைந்த இந்த இயக்கம் ரொம்ப வலிமையானது. இதன் தலைவரான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொல்வதற்காக ஒட்டுமொத்த இலங்கை ராணுவமும் காலம் காலமாகப் போராடி வருகிறது. கடந்த சில மாதங்களாக ராஜபக்க்ஷே தலைமையிலான இலங்கை ராணுவம் ஏராளமான விடுதலைப்புலிகளைக் கொன்றுகுவித்து வருகிறது. இலங்கையில் கிட்டத்தட்ட ஒரு “கிளைமாக்ஸ்“ யுத்தம் நடந்து வருகிறது.


புதிய பரபரப்பு

இந்த நிலையில் “டெய்வு மிர்ரர்“ என்ற பிரபல ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்டுள்ள புதிய தகவல் இலங்கை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகளின் கொடிக்கு பின்னால் ஒரு ரகசியம் இருப்பதாக அந்தப் பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது.


புலிகளின் கொடி


விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடி 1976-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முழுக்க, முழுக்க இந்தக்கொடி தலைவர் பிரபாகரனின் கற்பனையில் உருவாக்கப்பட்டது.

சீறும் முகத்தோற்றம் கொண்ட புலி, 2 துப்பாக்கிகள், 33 புல்லட்டுகள் என அவர் கட்சிக்கொடி மற்றும் சின்னம் குறித்து கற்பனை செய்து வைத்திருந்தார்.


மதுரை ஓவியர்


புலித் தலைவர் பிரபாகரன் அப்போது மதுரையில் இருந்தார். இந்தச் சின்னத்தை ஒரு இந்திய ஓவியர் வரைந்தால் நல்லது எனக் கருதினார். அதன்படி மதுரையைச் சேர்ந்த ஒரு ஓவியர் வரவழைக்கப்பட்டு அவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

அந்த ஓவியம் தலைவர் பிரபாகரன் எந்த மாதிரி கற்பனை செய்து வைத்திருந்தாரோ, அச்சு அசப்பில் அப்படியே வரைந்து கொண்டு வந்து கொடுத்தார். அதைப் பார்த்ததும் தலைவர் பிரபாகரன் ரொம்பவே மகிழ்ந்து போனார். அந்தச் சின்னத்தை உடனே ஓ.கே செய்துவிட்டார்.


வண்ணங்களின் எண்ணங்கள்


கொடியில் உள்ள நிறங்களை மட்டும் அவர் விருப்பப்படி மாற்றி அமைத்தார்.

தமிழீழ விடுதலைக்கான நேர்மையான போராட்டம் என்பதைக் குறிக்கும் வகையில் மஞ்சள் நிறம், இது ஒரு கடுமையான போர் மற்றும் சமத்துவ அமைப்பு என்பதை சொல்லும் வகையில் சிவப்பு நிறம், இடையூறல்களும், மரணங்களும் தவிர்க்க முடியாது என்பதைக் குறிக்கும் வண்ணம் கருப்பு நிறம், இது இலங்கைத் தமிழர்கள் மரியாதையுடன் வாழவும், சுய லாபமற்ற சுத்தமான இயக்கம் என்பதையும் குறிக்கும் வண்ணம் வெள்ளை நிறத்தைத் தேர்வு செய்தார்.


33 புல்லட்டுகள்


இந்தக் கொடியில் சீறும் புலியைச் சுற்றிலும் உள்ள 33 புல்லட்டுகளைக் குறிப்பிட்டுள்ளார் என்பதன் பின்னணியில் “விஷயம்“ இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தலைவர் பிரபாகரன் நியூமராலஜி எனப்படும் எண்கணிதம் மீது மிகவும் நம்பிக்கை கொண்டவர். அதேபோல “எதிலும் ரகசியம் காக்க வேண்டும்“ என்ற எண்ணமும் கொண்டவர்.

விடுதலைப் புலிகளின் கொடியில் நியூமராலஜியும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.


2009-ல் என்ன நடக்கும்?


கடந்த 1976-ஆம் ஆண்டு அவர் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கான கொடி மற்றும் சின்னம் வரையும்போதே 33 ஆண்டுகளில் இலங்கை தமிழர் சுதந்திரம் கிடைத்துவிடும் என்று கணித்துள்ளார். இது பற்றி பரம ரகசியமும் காத்து வந்துள்ளார். 33-ம் எண் ஒரு “கிரிட்டிக்கல்“ எண் என்பதை மட்டும் கூறியுள்ளார்.

இதன்படி கடந்த 2008-ஆம் ஆண்டுடன் 33 புல்லட்டுகளும் காலியாகிவிட்டன. 2009-ஆம் ஆண்டுக்கான புல்லட் எதுவும் இல்லை?

எனவே 33 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கணித்து வைத்திருந்த ரகசியத்தின் “கிளைமாக்ஸ்“ தற்போது நடைபெற்று வருவதாகவே தெரிகிறது.


பீதியில் இலங்கை


இத்தகைய புதிய தகவல்கள் பரவியதால் இலங்கை முழுவதும் பரபரத்து காட்சியளிக்கிறது.

“தலைவர் பிரபாகரன் எதாவது ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்தலாம். அது, இதுவரை இல்லாத சம்பவமாக இருக்கும்“ எனப் பலர் கருதுகின்றனர்.

இலங்கை ராணுவத்தைப் பொறுத்தவரை “கடந்த 2008-ஆம் ஆண்டுடன் பிரபாகரன் பேராட்டம் முடிந்துபோனது. 2009-ல் புலிகள் இயக்கம் முடிவு காணப்படும் என்பதைத்தான் 33 புல்லட்டுகள் சொல்கின்றன“ எனக் கூறி வருகின்றனர்.

“நாளை என்ன நடக்கும்? யாரறிவாரோ?


நெல்லை மாலைமுரசு, 09.04.2009





கருத்துகள் இல்லை: