திங்கள், 11 மே, 2009

திருமா முகத்தில் சாணியை பூசிய திமுக - காங்கிரஸ்!

திருமா முகத்தில் சாணியை பூசிய திமுக - காங்கிரஸ்!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தொல் திருமாவளவனின் பெயரைக் குறிப்பிடுவதைத் தவிர்த்தார் சோனியா காந்தி.

முன்னதாக தீவுத்திடலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்த போது, முதலில் முதல்வர் கருணாநிதியும், சிறிது நேரத்தில் சோனியா காந்தியும் மேடைக்கு வந்தனர்.

அப்போது இரு தலைவர்களையும் வாழ்த்தி திருமாவளவன் கோஷமிட்டார். இதன்பின் கருணாநிதி அளித்த “சமிக்ஞையின்” பேரில் தனது பேச்சை திருமாவளவன் முடித்துக் கொண்டார்.

இக்கூட்டத்தில் சோனியா தனது பேச்சை முடிக்கும் முன்பாகக்கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரது பெயரையும் வரிசையகாகக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். ஆனால், திருமாவளவனின் பெயரை மட்டும் சோனியா குறிப்பிடவில்லை.

இதனால், மேடையில் அமர்ந்திருந்த திருமாவளவன் அதிர்ச்சி அடைந்தார். அவரது கட்சியினரும் மௌனமாக நின்றனர். இதனால், திருமாவளவன் உற்சாகமிழந்து காணப்பட்டார்.

ஆனாலும், சிறிது நேரத்தில் மேடையில் இருந்த காங்கிரஸ், கூட்டணி வேட்பாளர்களை தனது அருகில் நிற்கச்செய்தார் சோனியா. அப்போது தயக்கத்துடன் ஒதுங்கியதிருமாவளவனை கவனித்த சோனியா, அவரை அழைத்து தனது அருகில் நிற்கச் செய்தார். இதன்பின் கூட்டத்தினரைப் பார்த்துகையசைத்தவாறு விடைபெற்று சென்றார்.

கருத்துகள் இல்லை: