செவ்வாய், 1 டிசம்பர், 2009

சர்வதேச நகர்பேசி அடையாளம் (IMEI) - சில கேள்விகள்

சர்வதேச நகர்பேசி அடையாளம் (IMEI)

சர்வதேச நகர்பேசி அடையாளம் - சில கேள்விகள்

வணக்கம் நண்பர்களே!

கடந்த இரு தினங்களாக நாளிதழ்களில் வெளிவந்த செய்தி: "ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத சீன, கொரிய செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும்".

அதன் எதிரொலியாக இந்த எண்ணைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரத்தையுடன் பல கடைகளில் எண்களைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால்,

  1. தற்போது விற்பனையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் சீன, கொரிய செல்போன்கள் இறக்குமதி அரசின் முறையாக அனுமதி பெற்றதா?
  2. முறையாக அனுமதி பெற்றது என்றால், எதற்காக ஐ.எம்.இ.ஐ. எண் இல்லாத செல்போன்களை ஏன் விற்பனை செய்தனர்?
  3. அனுமதி பெறவில்லையென்றால் இவ்வளவு காலம் இந்திய அரசோ அல்லது மாநில அரசுகளோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
  4. தற்போது விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ஐ.எம்.இ.ஐ எண்கள் அரசின் முழு அனுமதி பெற்றது என்பதை எப்படி நாங்கள் நம்புவது?
  5. அதை விற்பனை செய்யும் செல்போன் கடைகளுக்கு எதன் அடிப்படையில் அனுமதி வழங்கினீர்கள்?
  6. ஏற்கெனவே கள்ளமார்க்கெட்டில் வந்து இங்கு விற்பனையாகிக் கொண்டிருக்கும் சீன, கொரிய செல்போன்கள் விற்பனை செய்தவர்கள் மீது மத்திய அரசோ, மாநில அரசுகளோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?


 

விடைகளுக்காக காத்திருக்கிறேன்.

நன்றி!


கருத்துகள் இல்லை: