செவ்வாய், 24 மார்ச், 2009

மக்கள் விரோத மார்க்ஸிஸ்டுகள்

அண்மைக் காலமாக தமிழ் நாட்டில் ஓரளவு அரசியல் தெரிந்தவர்களுக்கும் பத்திரிக்கை வாசிப்பவர்களுக்கும் வேதனை தரும் ஒரு விஷயத்தைப் பற்றி இப்பொழுதாவது பேசியாக வேண்டும். இதுவரை பேசமால் இருந்த தவறுக்கான விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம். அது தான் அந்தக் கட்சியின் தமிழின விரோதப் போக்கு. இந்திய, சீன எல்லைப் போரில் இந்திய அரசுக்கும், மக்களுக்கும் எதிராக சீன ஆதரவு நிலையினை எடுத்து அதிலே பிறந்ததுதான் இந்தக் கட்சி.

பாட்டாளி, விவாசயிகள், விவசாயம், ஏகாதிபத்தியம் ஆகிய சொற்களை வைத்து அரசியல் நடத்தும் இவர்கள் எப்பொழுதும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவே செயலாற்றி வருகிறார்கள். குறிப்பாக மொழி, சாதி என்ற இரண்டு விசயங்களில் பெருவாரியான தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுவதே இவர்களுடைய வாடிக்கை. 1965-ல் இந்தி எதிர்ப்பு உணர்வு தமிழகத்தில் தீயாகப் பரவிய போது இவர்கள் இந்திக்கு ஆதரவாக நின்றார்கள். இந்தக் கட்சியும் இவர்களது பொலிட் பீரோவும், எப்பொழுதும் பிராமணர்கள் கைவசமே இருக்கிறது என்பதுவே காரணம். இவர்களது இலக்கிய அமைப்பான த.மு.எ.ச பாரதியாரை மட்டுமே கொண்டாடும். திராவிட இயக்கக் கவிஞரான பாரதிதாசனுக்கு எதிராக இவர்கள் செய்த சூழ்ச்சிதான் அது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்சி வங்காளிகள், மலையாளிகள் ஆதிக்கத்தில் உள்ளது. ஏனென்றால் இவர்கள் சில காலம் ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருந்தார்கள். முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் நீதிமன்றமே தீர்ப்பளித்திருந்தாலும் கூட இவர்கள் கேரளத்திற்கு ஆதரவு அளித்து வந்தார்கள். ஒக்கேனக்கல் விசயத்திலும் இதே தமிழ் விரோத நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்கள்.

சேலம் இரயில்வே கோட்டத்தை பாலக்காட்டில் இருந்து பிரிக்கக் வுடாது என்பதில் இவர்கள் தங்களை மலையாளிகளாகவே அடையாளம் காட்டிக் கொண்டார்கள். கேரளாவின் அனைத்து எம்.பி.க்களும், சி.பி.எம். தலைமையில் அணி திரண்டு மத்திய அமைச்சர்களைச் சந்தித்தார்கள். தமிழக மார்க்சிஸ்ட் எம்.பிக்களும் இதற்கு உடந்தை. தங்கள் தொழிற்சங்க்க் கூட்டங்களில் அதை வெளிப்படையாகவும் பேசினார்கள். அண்மையில் ஈழத்தமிழர் மீதான கொடுமையான அரசு பயங்கரவாதத்தைப் பற்றி இவர்கள் பேச மறுக்கிறார்கள்.

மண்டல் கமிஷன் விசயத்திலும் இவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவே இப்படித்தான் நாடகமாடினார்கள். வி.பி.சிங்கிற்கு எதிராக வங்காள மார்க்சிஸ்டு கட்சி நிலைப்பாட்டையே தங்கள் கட்சியின் கொள்கையாக அறிவித்தார்கள். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தங்கள் பிள்ளைகளுக்கு இடம் வாங்கிக் கொண்ட பிறகும் கூட இவர்கள் இந்த தந்திரத்தை கை விடவில்லை. வெண்மணியில் நடந்த கொடுமையினை இவர்கள் விவசாயிகளுக்கு எதிராக மட்டுமே சித்தரித்தார்கள். எரித்து கொல்லப்பட்வர்கள் அனைவருமே தலித்கள் என்பதை சௌகரியமாக மறைத்துவிட்டார்கள்.

அமெரிக்க எகாதிபத்தியம் தலையிட்ட நாடுகளில் எல்லாம் அதை எதிர்ப்பதாகவே காட்டிக் கொள்வார்கள். ஆனால் ஈழச் சிக்கலில் அமெரிக்கா தமிழர்களுக்கு எதிராக உதவிகள் வழங்குவதை கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இவர்களுக்கு தமிழ், தமிழ் மொழி, தமிழினம் ஆகிய சொற்களே வேப்பங்காய்தான். வங்காளிகள் பாதிக்கப்பட்டபோது பாகிஸ்தானின் இறையாண்மையை பாதித்தபடி இந்தியப் படைகள் வங்காளதேசத்திற்குள் நுழைந்த்தே அப்போது இவர்கள் வங்காளிகள். தமிழ்ர்களுக்கு சிக்கல் வரும்போதெல்லாம் இவர்கள் இந்தியராகிவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் சில சீட்டுகளுக்காக திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேரும் பொழுது அதற்கென தனியாக தர்க்க நியாயம் பேசுவார்கள். வாக்கு வங்கி இருக்கிறது என்ற தவறான நம்பிக்கையில் விஜயகாந்த் வீட்டுக்கு போய் தவம் கிடப்பதில் இவர்களுக்கு வெட்கம் ஏதும் கிடையாது. வெட்கம் கெட்ட இந்த தமிழ் விரோதக் கட்சியினை இப்பொழுதாவது தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்.

தொழிற்சங்கங்களை, அவற்றின் சந்தாப் பணங்களை மட்டுமே நம்பி கட்சி நடத்தும் இவர்களின் தமிழ், தமிழர் விரோதப் போக்கினை இனியாவது தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும். இது பிரச்சாரம் அல்ல. சிந்திப்பதற்கு ஒரு வேண்டுகோள்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித்திரு நாடு

இவண்

தமிழ் இளைஞர் மன்றம்

திருநெல்வேலி


தொடர்புக்கு 94434 86285, 94436 14556


கருத்துகள் இல்லை: