சனி, 19 செப்டம்பர், 2009

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை

இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை

பண்பாட்டை காக்கும் ஒரே நிறுவனம் தூர்தர்ஷன்தான்: ஜெகத்ரட்சகன்

பண்பாட்டை காக்கும் ஒரே நிறுவனம் தூர்தர்ஷன்தான் என்று மத்திய இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.

ஆசியாவில் மிகப் பெரிய நிறுவனமான இந்திய தொலைக்காட்சியின் (தூர்தர்ஷன்) பொன் விழா ஆண்டையொட்டி (1959   2009), சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரதகான சபாவில், பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கி பேசுகையில்,

தூர்தர்ஷன் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இன்று பொன்விழா கொண்டாடுகிறோம். 91 சதவீதம் பேர் தூர்தர்ஷன் சேனலை பார்க்கிறார்கள். 30 சேனல்களை 35 கோடி மக்கள் பார்த்து வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு 7 கோடி மக்களைத்தான் சென்றடைகிறது. நடுநிலையுடன் நாட்டு நடப்புகளை மக்களுக்கு புகட்டும் ஆசிரியராக தூர்தர்ஷன் விளங்குகிறது. பல சேனல்களில் செய்திகள் வாசிக்கப்பட்டாலும், பொதிகை சேனல் உண்மையான செய்திகளை தருகிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய, புகழ் வாய்ந்த சேனல் தூர்தர்ஷன்தான். மகாபாரதம், ராமாயணம் ஆகிய இதிகாசங்களை தத்ரூபமாக ஒளிபரப்பியது. இதிகாசம், பண்பாட்டை காக்கும் ஒரே நிறுவனம் தூர்தர்ஷன்தான் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16834


கருத்துகள் இல்லை: