புதன், 4 மார்ச், 2009

உலகில் சிறந்த வேலைக்கு 2 இந்தியர்கள் தேர்வு

உலகில் சிறந்த வேலைக்கு 2 இந்தியர்கள் தேர்வு

மெல்போர்ன், மார்ச் 3: ஆஸ்திரேலியாவின் ஹாமில்டன் தீவை நிர்வகிக்க உலக முழுவதும் இருந்து 50 பேரை அந்நாட்டின் குயின்ஸ்லேண்ட் மாநில அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த 50 பேரில் இரண்டு பேர் இந்தியர்கள். இதில் ஒருவர் மும்பையை சேர்ந்த கிம் ஜக்தியானி மற்றொருவர் பெங்களூரைச் சேர்ந்த அஞ்சன் ஆவார்.

ஹாமில்டன் தீவினை சுற்றுலா மையமாக உலக அரங்கில் மேம்படுத்தும் பிரசாரத்தை குயின்ஸ்லேண்ட் மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாகத்தான் இந்த 50 பேரை தேர்ந்தெடுத்துள்ளது.

"உலகிலேயே சிறந்த வேலை' என்று பெயரிட்டு உலகம் முழுவதும் இருந்து விண்ணப்பத்தை கோரியது குயின்ஸ்லேண்ட் மாநில அரசு. இந்த வேலைக்காக 34,684 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் இருந்து 50 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 50 பேரும் ஹாமில்டன் தீவை 6 மாதம் நிர்வகிப்பார்கள். இவர்களுக்கு இந்த பணிக்காலத்தில் தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும்.

நன்றி: தினமணி 04.03.2009

கருத்துகள் இல்லை: